Shanmugan Murugavel / 2016 மே 18 , மு.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வந்த பிறீமியர் லீக் தொடரின் கடந்த செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி பெற்றுள்ளது.
மன்செஸ்டர் யுனைட்டெட், ஏ.எஃப்.சி போர்ண்மெத் ஆகிய அணிகளுக்கிடையே மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெறவிருந்து, பொய்க் குண்டினால் கைவிடப்பட்ட போட்டியே செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தது.
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் தலைவர் வெய்ன் ரூனி போட்டியின் 43ஆவது நிமிடத்தில் பெற்ற கோல், ஐரோப்பிய கிண்ணத்துக்கான இங்கிலாந்து உத்தேச அணிக்கு தேர்வான மார்க் ரஷ்ஃபோர்ட் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் பெற்ற கோல், போட்டியின் 87ஆவது நிமிடத்தில் ஆஷ்லி யங் பெற்ற கோல் கைகொடுக்க 3-1 என்ற கோல்கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வெற்றி பெற்றது. போர்ண்மெத் அணிக்கு கிடத்த ஒரு கோலும், மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கிறிஸ் ஸ்மோலிங்கினால் ‘ஒவ்ண் கோல்’ முறையில் பெறப்பட்டதே ஆகும்.
இப்போட்டியில் பெறப்பட்ட வெற்றியுடன் 66 புள்ளிகளைப் பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட், இந்தப் பருவகாலத்தை பிறீமியர் லீக் புள்ளிகள் வரிசையில் ஐந்தாவது இடத்துடன் முடித்துக் கொண்டது.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago