Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலி கிராண்ட் பீரிக்ஸில், தனது மேர்சிடஸ் அணி சக வீரரும், நெருங்கிய போட்டியாளருமாகிய நிக்கோ ரோஸ்பேர்க்கின் இயந்திரம் தீப்பற்றியதையடுத்து, அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து, பூரணமாக பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தி, பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன், போர்மியுலா வன் சம்பியன்ஷிப்பில் 53 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார்.
25 செக்கன்கள் குறைவாக பந்தயத்தூரத்தை கடந்த, உள்நாட்டவரான, பெராரி அணியின் செபஸ்டியான் விட்டல் இரண்டாமிடத்தை பெற்றார். தனது சக வில்லியம்ஸ் அணி வீரரான பின்லாந்தின் வல்ட்டேரியை விட 0.3 செக்கன்கள் முன்னதாக போட்டித்தூரத்தை கடந்த பிரேசிலின் பிலிப்பி மாஸா மூன்றாமிடத்தை பெற்றார்.
இந்த வெற்றி ஹமில்டனுக்கு மூன்றாவது இத்தாலி கிராண்ட் பீரிக்ஸ் வெற்றி என்பதுடன், இந்தப் பருவகாலத்தில் ஏழாவது வெற்றியாக அமைவதுடன், மொத்தமாக தனது 40வது வெற்றியை பெற்றுள்ளார்.
பந்தயம் முடிவடைவதுக்கு இரண்டு சுற்றுக்களுக்கு முன்பு, மூன்றாவதாக பயணித்துக்கொண்டிருந்த ரோஸ்பேர்க், இயந்திரக் கோளாறு காரணமாக பந்தயத்திலிருந்து விலக வேண்டி ஏற்பட்டது, அவருடைய பட்டக்கனவுக்கு பெரும் பின்னடைவாக காணப்படுகிறது.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago