2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 13 , பி.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கொல்கத்தாவில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இப்போட்டிக்கான ஆடுகளமானது ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமானதாகக் காணப்பட்டு பின்னர் மூன்றாவது நாளிலிருந்து சுழற்சியை வழங்குமெனத் தெரிகிறது.

தென்னாபிரிக்க அணியைப் பொறுத்த வரையில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் விளையாடிய டெவால்ட் பிறெவிஸை குழாமுக்குத் திரும்பியுள்ள அணித்தலைவர் தெம்பாப் பவுமா பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக இந்தியக் குழாமுக்குத் திரும்பியுள்ள றிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டியை அணியில் பிரதியிடவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X