Shanmugan Murugavel / 2022 ஜூலை 07 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் ஷுப்மன் கில், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கில் ஒன்றைரை ஆண்டுகளுக்குப் பின்னரும், சாம்ஸன் ஓராண்டுக்குப் பின்னரும் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
அணித்தலைவர் றோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ராஹ், றிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா, மொஹமட் ஷமி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், லோகேஷ் ராகுல், தீபக் சஹர், குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
அணித்தலைவராக ஷீகர் தவான் பெயரிடப்பட்டுள்ள நிலையில் உப அணித்தலைவராக இரவீந்திர ஜடேஜா பெயரிடப்பட்டுள்ளார்.
குழாம்: ஷீகர் தவான், ருத்துராஜ் கைகவாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷன் கிஷன், சஞ்சு சாம்ஸன், இரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், ஆவேஷ் கான், பிரசீத் கிருஷ்ணா, மொஹமட் சிராஜ், அர்ஷ்டீப் சிங்க்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026