2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்தியத் தொடருடன் ஓய்வு பெறுகிறார் குக்

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இலண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் தலைவர் அலிஸ்டயர் குக் அறிவித்துள்ளார்.

160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44.88 என்ற சராசரியில் 12,254 ஓட்டங்களை 33 வயதான குக் குவித்துள்ளபோதும் இவ்வாண்டு விளையாடிய ஒன்பது டெஸ்ட்களில் 18.62 என்ற சராசரியிலேயே ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை, 92 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 36.4 என்ற சராசரியில் 3,204 ஓட்டங்களைப் பெற்றுள்ள குக், நான்கு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .