Shanmugan Murugavel / 2021 மார்ச் 13 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியக் கால்பந்தாடக் கழககங்களுக்கு இடையிலான, இந்தியன் சுப்பர் லீக்கில் (ஐ.எஸ்.எல்), மும்பை சிற்றி கால்பந்தாட்டக் கழகம் சம்பியனாகியுள்ளது.
கோவாவில் இன்று நடைபெற்ற ஏ.டி.கே மோஹுன் பகனுடனான இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே மும்பை சம்பியனாகியுள்ளது.
மும்பை சார்பாக, பிபின் சிங்க் ஒரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. மோஹுன் பகன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டேவிட் வில்லியம்ஸ் பெற்றிருந்தார்.
மும்பை, தமது அரையிறுதிப் போட்டியில் கோவாவை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்ததுடன், நோர்த்ஈஸ்ட் யுனைட்டெட்டை வென்று இறுதிப் போட்டிக்கு ஏ.டி.கே மோஹுன் பகன் தகுதிபெற்றிருந்தது.
இத்தொடரின் லீக் நிலைப் போட்டிகளிலும் மும்பையே முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago
1 hours ago