2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

இந்தியாவுக்கெதிரான தொடரிலிருந்து ஜோசப் விலகல்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து முதுகுப் பகுதி காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விலகியுள்ளார்.

இந்நிலையில் திட்டமிடப்பட்ட மருத்துவ நடவடிக்கை காரணமாக ஜோசப்பின் பிரதியீடாக சகலதுறைவீரர் ஜேஸன் ஹோல்டர் மறுத்துள்ளார்.

அந்தவகையில் ஜோசப்பை பிரதியிட டெஸ்ட்களில் அறிமுகத்தை மேற்கொள்ளாத ஜெடியாஹ் பிளேட்ஸை மேற்கிந்தியத் தீவுகள் அழைத்துள்ளது.

கடந்த வாரம் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப்பும் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகிய நிலையில் புதுமுக வீரர் ஜோன் லேனால் பிரதியிடப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .