Shanmugan Murugavel / 2021 மார்ச் 04 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அஹமதபாத்தில் இன்று ஆரம்பமான நான்காவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் முடிவில் இங்கிலாந்து போராடுகின்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜோ றூட், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இங்கிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய, ஜொஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் ப்ரோட்டை டான் லோரன்ஸ், டொம் பெஸ் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.
இந்தியா சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய ஜஸ்பிரிட் பும்ராவை மொஹமட் சிராஜ் பிரதியிட்டிருந்தார்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் 55, டான் லோரன்ஸ் 46, ஒலி போப் 29, ஜொனி பெயார்ஸ்டோ 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல் 4, இரவிச்சந்திரன் அஷ்வின் 3, மொஹமட் சிராஜ் 2, வொஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா, இன்றைய முதலாம் நாள் ஆட்டமுடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ஓட்டங்களைப் பெற்றது.
தற்போது களத்தில், செட்டேஸ்வர் புஜாரா 15, ரோஹித் ஷர்மா எட்டு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ஜேம்ஸ் அன்டர்சன் வீழ்த்தியிருந்தார்.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago