2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, திருவனந்தபுரத்தில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

உலகக் கிண்ணத்துக்கு முந்தைய இறுதித் தொடராக இத்தொடர் இந்தியாவுக்கு அமைகின்ற நிலையில், அணியை இறுதி செய்வதற்கான இறுதிச் சந்தர்ப்பமாக இத்தொடர் நோக்கப்படுகிறது.

குறிப்பாக பந்துவீச்சே கவனம் பெறுவதோடு, புவ்னேஷ்வர் குமார், ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் ஓட்டங்களை அதிகம் வழங்கியிருந்த நிலையில் ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்டீப் சிங் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பாகச் செயற்படவேண்டியுள்ளதோடு, ஹர்ஷால் பட்டேல் மேம்பட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்தி நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டியுள்ளது. தவிர, யுஸ்வேந்திர சஹாலும் தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

மறுபக்கமாக பலம் வாய்ந்த அணியாகக் காணப்படும் தென்னாபிரிக்காவில் ஒவ்வொரு வீரரும் தமதிடங்களை உறுதிப்படுத்துவதற்கு சிறப்பான பெறுபேறுகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். குறிப்பாக அணித்தலைவர் தெம்பா பவுமா குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை தொடர்ச்சியாக பெற வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X