Shanmugan Murugavel / 2024 நவம்பர் 11 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா வென்ற நிலையில், கெஹெபாவில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரம் தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, மார்கோ ஜன்சன், ஜெரால்ட் கொயட்ஸி, அன்டிலி சிமிலோனி, மார்க்ரம், இங்காபிஓமி பீற்றரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து கேஷவ் மஹராஜ்ஜின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஹர்தி பாண்டியா ஆட்டமிழக்காமல் 39 (45), அக்ஸர் பட்டேல் 27 (21), திலக் வர்மா 20 (20) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 125 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, வருண் சக்கரவர்த்தி (5), ரவி பிஷ்னோயிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் ஆட்டமிழக்காத 47 (41), கொயட்ஸியின் ஆட்டமிழக்காத 19 (09) ஓட்டங்களோடு 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஸ்டப்ஸ் தெரிவானார்.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago