Shanmugan Murugavel / 2023 ஜனவரி 17 , பி.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, ஹைதரபாத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இவ்வாண்டு இந்தியாவிலேயே உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள நிலையில், தத்தமது அணிகளை உறுதிப்படுத்திக் கொள்ள இரண்டு அணிகளுக்கும் இத்தொடர் வாய்ப்பாகக் காணப்படுகின்றது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் இத்தொடரில் லோகேஷ் ராகுல், அக்ஸர் பட்டேல் ஆகியோர் விளையாட முடியாத நிலையில், இஷன் கிஷன், வொஷிங்டன் சுந்தர் போன்றோரை அணியில் உள்ளடக்குவதற்கான சந்தர்ப்பமாக இது காணப்படுகின்றது.
தவிர, யுஸ்வேந்திர சஹால், குல்டீப் யாதவ் ஆகிய இருவரில் எவரைத் தேர்வு செய்வதென்பதைத் தீர்மானிக்கக் கூடிய வகையில் இத்தொடர் காணப்படுகிறது.
இதேவேளை, சூரியகுமார் யாதவ்வை அணியில் உள்ளடக்குவதா என்ற தெளிவையும் இத்தொடர் வழங்கலாம்.
இதுதவிர, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரதியிடுவதற்கான ஷர்துல் தாக்கூர், ஷபாஸ் அஹ்மட் ஆகியோரையும் இத்தொடரில் இந்தியா பரீசிலிக்கலாம்.
இந்நிலையில் நியூசிலாந்துப் பக்கம் இந்தியாவில் பின் அலென் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டியுள்ளார். ஏனெனில், குழாமில் மார்டின் கப்தில் காணப்படுகின்றார். தவிர, ஹென்றி நிக்கொல்ஸும் ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளதுடன், மிஷெல் பிறேஸ்வெல்லின் பெறுபேறுகளை பார்க்கக் கூடிய தொடராக இத்தொடர் காணப்படுகின்றது.
21 minute ago
31 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
51 minute ago