Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 08 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் மோதுகின்ற நிலையில், இத்தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு புனேயில் ஆரம்பிக்கிறது.
இலங்கையணியின் சிரேஷ்ட வீரர்களான லசித் மலிங்க, அஞ்செலோ மத்தியூஸ், திலகரட்ன டில்ஷான் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்காத நிலையில், குழாமில் இடம்பெற்றுள்ள இளம்வீரர்கள், அடுத்த மாதம் இந்தியாவிலேயே இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பிடிப்பதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மறுகணம், உலக இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமது விளையாடும் பதினொருவர் அணியை சரி பார்த்துக் கொள்வதற்கு வசதியாக இத்தொடர் அமைந்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் இந்திய அணி- ஷீகர் தவான், ரோஹித் ஷர்மா, அஜிங்கியா ரகானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், மகேந்திர சிங் டோணி (தலைவர்), ஹர்டிக் பாண்ட்யா, இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரிட் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி- தசுன் ஷானக, தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால் (தலைவர்), சாமர கப்புகெதர, மிலிந்த சிரிவர்த்தன, சீக்குக பிரசன்னா, திஸார பெரேரா, ஜெப்ரி வன்டேர்ஸே, டுஷ்மந்த சமீர, டில்ஹார பெர்னாண்டோ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .