Shanmugan Murugavel / 2015 நவம்பர் 12 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் வேர்ணன் பிலான்டர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, இன்னொரு வேகப்பந்துவீச்சாளரான கைல் அபோட், தென்னாபிரிக்க குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் பயிற்சியின்போது, கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கையில் அவரது முழங்கால் திரும்பியதால், அவர் உபாதைக்குள்ளாகியிருந்தார். அதனையடுத்து, மைதானத்திலிருந்து உதவியாளர்களால் அவரைத் தூக்கிச்செல்ல நேரிட்டது.
இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கானில், அவர் எட்டு வாரங்களுக்கு போட்டியில் பங்கெடுக்க முடியாது எனத் தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே, மேல் தொடைப்பகுதியில் உபாதையுற்ற டேல் ஸ்டெய்ன், இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகத்துக்குரியதாகக் காணப்படும் நிலையில், வேர்ணன் பிலான்டரின் இக்காயம், தென்னாபிரிக்காவுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
9 minute ago
16 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
43 minute ago
2 hours ago