Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான தொடரொன்றுக்கான வாய்ப்புகள் அரிதாக இருப்பதை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் அனுரக் தாக்கூர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான தொடர், இலங்கையில் வைத்து இடம்பெற இணக்கம் காணப்பட்டதோடு, பாகிஸ்தான் அரசாங்கத்தின் அனுமதியும் கிடைத்தது. ஆனால், இந்திய அரசாங்கத்தின் அனுமதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கோரிய போதிலும், இன்னமும் பதில் கிடைத்திருக்கவில்லை.
இந்நிலையில், அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான தொடர், ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அதற்கிடையில் அனுமதி கிடைத்து, தொடரொன்றில் விளையாடுவது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago