2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இந்தியாவுக்கு 197 ஓட்டங்களால் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இரவிச்சந்திரன் அஷ்வினின் சிறப்பான சுழற்பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து அணி, 197 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

கான்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில், 434 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களுடன் இன்றைய 5ஆவது நாளை ஆரம்பித்தது.
4ஆவது நாளில் போராடிய லூக் றொங்கி, மிற்சல் சான்ட்னெர் ஜோடி, நேற்றும் போராடிய போதிலும், 5ஆவது விக்கெட்டாக றொங்கி ஆட்டமிழந்த பின்னர், விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.

துடுப்பாட்டத்தில் லூக் றொங்கி 80, மிற்சல் சான்ட்னெர் 71, கேன் வில்லியம்ஸன் 25 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் கலக்கிய அஷ்வின், 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொஹமட் ஷமிக்கு 2 விக்கெட்டுகளும் இரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இந்திய அணி, முரளி விஜயின் 65, செற்றேஸ்வர் புஜாராவின் 62, இரவீந்திர ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 42, இரவிச்சந்திரன் அஷ்வினின் 40 ஓட்டங்களின் துணையோடு, 318 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மிற்சல் சான்ட்னெரும் ட்ரென்ட் போல்ட்டும் தலா 3 விக்கெட்டுகளையும் நீல் வக்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணி தனத முதல் இனிங்ஸில் கேன் வில்லியம்ஸனின் 75, டொம் லேதமின் 58, லூக் றொங்கியின் 38, மிற்சல் சான்ட்னெரின் 32 ஓட்டங்களின் துணையோடு 262 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் இரவீந்திர ஜடேஜா 5, இரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்திய அணி தனது 2ஆவது இனிங்ஸில், புஜாராவின் 78, விஜயின் 76, றோகித் ஷர்மாவின் ஆட்டமிழக்காத 68, ஜடேஜாவின் ஆட்டமிழக்காத 50 ஓட்டங்களின் துணையோடு 5 விக்கெட்டுகளை இழந்து 377 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்தது. பந்துவீச்சில் இஷ் சோதி, மிற்சல் சான்ட்னெர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியில் சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய இரவீந்திர ஜடேஜா, இப்போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .