Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நாக்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில், இனிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் இந்தியா வென்றுள்ளது.
ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ஓட்டங்களைப் பெற்று, இந்திய அணியின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 384 ஓட்டங்கள் பின்தங்கியவாறு, இன்றைய நான்காம் நாளில் தமது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இலங்கையணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக 166 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
துடுப்பாட்டத்தில், இலங்கையணி சார்பாக, அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மாத்திரம் 61 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக, இரவிச்சந்திரன் அஷ்வின் 4, இரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஸ்கோர் விபரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 205/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 57, திமுத் கருணாரட்ன 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 4/67, இரவீந்திர ஜடேஜா 3/56, இஷாந்த் ஷர்மா 3/37)
இந்தியா: 610/6 (துடுப்பாட்டம்: விராத் கோலி 213, செட்டேஸ்வர் புஜாரா 143, முரளி விஜய் 128, ரோகித் ஷர்மா ஆ.இ 102 ஓட்டங்கள். பந்துவீச்சு: டில்ருவான் பெரேரா 3/202, லஹிரு கமகே 1/97, ரங்கன ஹேரத் 1/81)
இலங்கை: 166/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 61 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 4/63, இரவீந்திர ஜடேஜா 2/28, உமேஷ் யாதவ் 2/30, இஷாந்த் ஷர்மா 2/43)
போட்டியின் நாயகன்: விராத் கோலி
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago