Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 19 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது பார்ளில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
இந்திய அணித்தலைமைப் பதவியை முற்றிலுமாக விராட் கோலி துறந்த பின்னர் அவர் பங்கேற்கும் முதலாவது தொடர் இத்தொடர் என்பதால் அவர் கூடியதாக கவனம் பெறுவார். அழுத்தமில்லாத கோலி ஏற்கெனவே சராசரியாக சிறப்பாக இருக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் என்பது கவனத்துக்குரியதாக இருக்கும்.
இதேவேளை, இரவிச்சந்திரன் அஷ்வின், ஷீகர் தவானின் பெறுபேறுகள் உற்று நோக்கப்படும் தொடராகவும் இத்தொடர் இருக்கும். ஏனெனில், அஷ்வின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மீள்வருகை புரிவதோடு மறுபக்கமாக ருத்துராஜ் கைகவாட் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயற்படுவது தவானுக்கு அழுத்தத்தை வழங்குகின்றது.
இதுதவிர, வெங்கடேஷ் ஐயரின் சகலதுறைப் பெறுபேறுகளும் அவரது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக மாறப் போகின்றது.
மறுபக்கமாக இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பலவீனமாகக் காட்சியளிக்கும் தென்னாபிரிக்காவுக்கு குயின்டன் டி கொக், ஜனமென் மலன், ஏய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், றஸி வான் டர் டுஸன் ஆகியோரின் பெறுபேறுகளே சவாலை அளிக்கக் கூடியதாக விளங்கும்.
22 minute ago
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
1 hours ago