2026 மார்ச் 07, சனிக்கிழமை

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய சஹிப்ஸடா பர்ஹான்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 06 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் சஹிப்ஸடா பர்ஹான் முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டியில் 100 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

இதேவேளை சிம்பாப்வேக்கெதிராக 38 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் இஷன் கிஷன், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.

இந்நிலையில் சிம்பாப்வேக்கெதிராக 44, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக 27 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் திலக் வர்மா, ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

இதுதவிர சிம்பாப்வேக்கெதிராக 42 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் டெவால்ட் பிறெவிஸ், ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. அபிஷேக் ஷர்மா, 2. சஹிப்ஸடா பர்ஹான், 3. பில் ஸோல்ட், 4. இஷன் கிஷன், 5. பதும் நிஸங்க, 6. திலக் வர்மா, 7. சூரியகுமார் யாதவ், 8. டெவால்ட் பிறெவிஸ், 9. ஜொஸ் பட்லர், 10. டிம் செய்ஃபேர்ட்.

இந்நிலையில் சிம்பாப்வேக்கெதிராக 50 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ஹர்திக் பாண்டியா, சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. சிகண்டர் ராசா, 2. ஹர்திக் பாண்டியா, 3. சைம் அயூப், 4. டிபேந்திர சிங் ஐரீ, 5. அஸ்மதுல்லா ஓமர்ஸாய்.

இதேவேளை இலங்கைக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியா ஜஸ்பிரிட் பும்ரா, எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. வருண் சக்கரவர்த்தி, 2. ரஷீட் காப், 3. அப்ரார் அஹ்மட், 4. கொர்பின் பொஷ், 5. அடில் ரஷீட், 6. அடம் ஸாம்பா, 7. ஜஸ்பிரிட் பும்ரா, 8. மத்தியூ போர்ட் 9. முஸ்தபிசூர் ரஹ்மான், 10. முஜீப் உர் ரஹ்மான்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .