Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் நீல் வக்னர் முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, இன்று வெளியிடப்பட்ட தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை நீல் வக்னர் அடைந்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் வேர்ணன் பிலாந்தர், எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 82 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் மர்னுஸ் லபுஷைன், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில், மேற்படி டெஸ்டில் 79 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் டேவிட் வோணர், எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை அஜின்கியா ரஹானேயுடன் பகர்ந்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 129 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் குயின்டன் டி கொக், 18ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago