Shanmugan Murugavel / 2025 ஜூலை 24 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகளின் றொஸ்டன் சேஸ் முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது போட்டியில் 60 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே ஒன்பதாமிடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை சேஸ் அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை இலங்கைக்கெதிரான மூன்றாவது போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய பங்களாதேஷின் முஸ்தபிசூர் ரஹ்மான், பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது போட்டியில் இரண்டு விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய நிலையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 26ஆம் இடத்திலிருந்து 17 இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மேற்குறிப்பிட்ட போட்டியில் 55 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் ஷே ஹோப், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 14ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி பத்தாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026