Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 213 ஓட்டங்களைப் பெற்ற றூட், நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 85 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் பாபர் அஸாம், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் ஜேஸன் ஹோல்டர், 11ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
43 minute ago