Freelancer / 2023 ஜூலை 05 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்தும், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அணித்தலைவர் பற் கமின்ஸும் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் 144 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை ஸ்மித் அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.கேன் வில்லியம்ஸன், 2. ஸ்டீவன் ஸ்மித், 3. மர்னுஸ் லபுஷைன், 4. ட்ரெவிஸ் ஹெட், 5. ஜோ றூட், 6. பாபர் அஸாம், 7. உஸ்மான் கவாஜா, 8. டரைல் மிற்செல், 9. திமுத் கருணாரத்ன, 10. றிஷப் பண்ட்.
குறித்த போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை கமின்ஸ் அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.இரவிச்சந்திரன் அஷ்வின், 2. பற் கமின்ஸ், 3. ககிஸோ றபாடா, 4. ஜேம்ஸ் அன்டர்சன், 5. ஒலி றொபின்ஸன், 6. ஷகீன் ஷா அஃப்ரிடி, 7. நேதன் லையன், 8. ஜஸ்பிரிட் பும்ரா, 9. இரவீந்திர ஜடேஜா, 10. ஸ்டூவர்ட் ப்ரோட்.
இப்போட்டியில் 172 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1.இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகிப் அல் ஹஸன், 4. பென் ஸ்டோக்ஸ், 5. அக்ஸர் பட்டேல்.
6 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
2 hours ago