Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், சென்னையில் தற்போது முடிவுக்கு வந்த ஆப்கானிஸ்தானுக்கெதிரான குழு டி போட்டியில் நியூசிலாந்து வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், குல்படின் நைப்பின் 63 (35), செதிகுல்லா அட்டலின் 29 (24), ரஹ்மனுல்லா குர்பாஸின் 27 (22), டர்விஷ் ரசூலியின் 20 (13), அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் 14 (07), மொஹமட் நபியின் ஆட்டமிழக்காத 10 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், மற் ஹென்றி 4-0-27-1, அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர் 4-0-23-0, லொக்கி பெர்கியூசன் 4-0-40-2, ஜேக்கப் டஃபி 3-0-30-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டிம் செய்ஃபேர்ட்டின் 65 (42), கிளென் பிலிப்ஸின் 42 (25), மார்க் சப்மனின் 28 (17), டரைல் மிற்செல்லின் ஆட்டமிழக்காத 25 (14), சான்ட்னெரின் ஆட்டமிழக்காத 17 (08) ஓட்டங்களோடு 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக செய்ஃபேர்ட் தெரிவானார்.
4 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago