2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இறுதிப் போட்டியில் ஹலெப், வொஸ்னியாக்கி

Editorial   / 2018 ஜனவரி 25 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டிகளில் வென்ற உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

சிமோனா ஹலெப், 6-3, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பரை போராடி வென்றிருந்தார்.

கரோலின் வொஸ்னியாக்கி, 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸை வென்றிருந்தார்.

அந்தவகையில், இலங்கை நேரப்படி நாளை மறுதினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் சிமோனா ஹலெப்பும் கரோலின் வொஸ்னியாக்கியும் மோதுகின்றனர்.

இதேவேளை, உலகின் ஆறாம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், தனது அரையிறுதிப் போட்டியில், 6-2, 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட்களில் ஐக்கிய இராச்சியத்தின் கைல் எட்மன்டைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ள மற்றைய அரையிறுதிப் போட்டியில், நடப்புச் சம்பியனும் உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரொஜர் பெடரர், தென்கொரியாவின் சொங் யொங்கை எதிர்கொள்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .