Shanmugan Murugavel / 2026 ஜனவரி 27 , பி.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இலங்கையும், இரண்டாவது போட்டியை இங்கிலாந்தும் வென்ற நிலையில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என்ற ரீதியில் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, அணித்தலைவர் ஹரி ப்றூக்கின் ஆட்டமிழக்காத 136 (66), ஜோ றூட்டின் ஆட்டமிழக்காத 111 (108), ஜேக்கப் பெத்தெல்லின் 65 (72) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு 358 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக பவன் ரத்னாயக்க 121 (115), பதும் நிஸங்க 50 (25) ஓட்டங்களைப் பெற்றபோதும் வில் ஜக்ஸ் (2), ஜேமி ஒவெர்டன் (2), அடில் ரஷீட் (2), லியம் டோஸன் (2), சாம் கர்ரனிடம் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 304 ஓட்டங்களையே பெற்று 53 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ப்றூக்கும், தொடரின் நாயகனாக றூட்டும் தெரிவாகினர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago