2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் பங்களாதேஷ்: இன்று ஆரம்பிக்கிறது ஒருநாள் தொடர்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 02 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கையணியைப் பொறுத்த வரையில் அண்மைய காலங்களில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பலமாகக் காணப்படுகின்ற நிலையில் பலத்த சவாலை பங்களாதேஷ் எதிர்கொள்கின்றது.

டில்ஷான் மதுஷங்க குழாமுக்குத் திரும்பியுள்ள நிலையில் அவர் அவதானிக்கப்படுவதுடன், எஷான் மலிங்கவின் பெறுபேறுகளும் அவதானிக்கப்படும். தவிர மிலான் ரத்னாயக்க காயத்திலிருந்து மீண்டால் அவரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை பரிசோதிக்கும்.

மறுபக்கமாக மெஹிடி ஹஸன் மிராஸ் அணியை மீட்டெடுக்க வேண்டியதுடன் துடுப்பாட்டவரிசையில் தனக்கு நிரந்தரமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. தவிர தனது பந்துவீச்சையும் மேம்படுத்த வேண்டியுள்ளது.

மீண்டும் குழாமுக்குத் திரும்பிய லிட்டன் தாஸ் மற்றும் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ, தெளஹிட் ஹிரிடோய் உள்ளிட்டோர் பெரிய இனிங்ஸ்களை ஆடினாலே இலங்கைக்கு சவாலை வழங்கலாம்.

தஸ்கின் அஹ்மட், முஸ்தபிசூர் ரஹ்மானின் மீள்வருகை பங்களாதேஷுக்கு மேலதிக பலத்தை வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .