Shanmugan Murugavel / 2025 நவம்பர் 13 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு கரிசனைகள் தொடர்பில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து விலகினால் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு முறையான விசாரணை நடத்தப்படுமென கிரிக்கெட் சபை அச்சுறுத்தியுள்ளது.
இலங்கையணி தங்கியுள்ள இஸ்லாமபாத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து சிலர் இலங்கைக்குத் திரும்ப வினவியிருந்தனர். இலங்கையிலுள்ள வீரர்களின் குடும்பங்கள் பாதுகாப்பு தொடர்பாக கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தன.
வீரர்கள், அணி முகாமைத்துவம், கிரிக்கெட் சபை சபை அதிகாரிகள், பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளிடையே புதன்கிழமை (12) பின்னிரவு வரைக்கும் தொடரின் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தன. அணி ஹொட்டலுக்குச் சென்ற பாகிஸ்தாம் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி மீண்டும் உறுதியளித்ததுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு குழாமின் ஏனைய அதிகாரிகளும் அணியின் பாதுகாப்பு உச்ச கட்டமாக இருப்பதை உறுதி செய்திருந்தனர்.
கலந்துரையாடல்கள் தாமதமாக முடிவடைந்ததுடன், ஏனைய ஏற்பாடுகள் நிச்சயமில்லாத நிலையில் இருந்த நிலையில் எஞ்சிய இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளும் ஒவ்வொரு நாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் வியாழக்கிழமை (13), சனிக்கிழமை (15) நடைபெறவிருந்த போட்டிகள் வெள்ளிக்கிழமை (14), ஞாயிற்றுக்கிழமைக்கு (16) ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரும் ஒரு நாள் ஒத்தி வைக்கப்படலாம்.
திட்டமிட்டபடி போட்டிகளில் விளையாடுமாறு வீரர்களுக்கு கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.
5 hours ago
7 hours ago
13 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
13 Nov 2025