2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 30 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் புதன்கிழமை (29) ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜாவும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும் தொடர்ந்து ஓட்டங்களைச் சேகரித்தனர்.

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் 141 ஓட்டங்களுடன் ஜெஃப்ரி வன்டர்சேயிடம் ஸ்டீவன் ஸ்மித் வீழ்ந்தார். இதன் பின்னர் ஜொஷ் இங்லிஸும் கவாஜாவும் ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 232 ஓட்டங்களுடன் பிரபாத் ஜெயசூரியவிடம் கவாஜா ஆட்டமிழந்தார். தொடர்ந்து இங்லிஸும் 102 ஓட்டங்களுடன் ஜெயசூரியவிடம் ஆட்டமிழந்தார்.

பின்னர் பியூ வெப்ஸ்டரும் 23 ஓட்டங்களுடன் வன்டர்சேயிடம் வீழ்ந்த நிலையில், 6 விக்கெட்டுகளை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்றபோது தமது இனிங்ஸை அவுஸ்திரேலியா இடைநிறுத்தியது. களத்தில் அலெக்ஸ் காரி 46 ஓட்டங்களுடனும், மிற்செல் ஸ்டார்க் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, மத்தியூ குனுமென், மிற்செல் ஸ்டார்க், நேதன் லையனிடம் ஒஷாத பெர்ணாண்டோ, திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸை இழந்து இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் கமிந்து மென்டிஸ் 13 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் ஒன்பது ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X