Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 07 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் ஒவ் ஸ்பெய்னில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் நேற்றைய முதலாவது நாள் முடிவில் போராட்டத்தை வெளிப்படுத்திய வண்ணம் மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜேஸன் ஹோல்டர், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 40 ஓட்டங்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்ததுடன் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தபோதும் ஷேன் டெளரிச், ஷை ஹோப், ஜேஸன் ஹோல்டர், கெரான் பவல், றொஸ்டன் சேஸ் ஆகியோர் பெற்ற ஓட்டங்கள் காரணமாகவும் குறிப்பாக ஜேஸன் ஹோல்டரும் ஷேன் டெளரிச்சும் தமக்கிடையே பகர்ந்த 90 ஓட்ட இணைப்பாட்டம் காரணமாக நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது களத்தில், ஷேன் டெளரிச் 46 ஓட்டங்களுடனும் தேவேந்திர பிஷூ ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக, ஷை ஹோப் 44, ஜேஸன் ஹோல்டர் 40, கெரான் பவல் 38, றொஸ்டன் சேஸ் 38 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லஹிரு குமார 3, சுரங்க லக்மால், ரங்கனஹேரத் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
41 minute ago
44 minute ago
1 hours ago