Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மார்ச் 01 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்லவும் இலங்கை இறுதியாக பங்கேற்ற இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரான பங்களாதேஷுக்கெதிரான தொடரின் இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த சுழற்பந்துவீச்சாளர் ஜெப்ரி வன்டர்சேயும் இடம்பெறவில்லை.
இதேவேளை, காயங்களிலிருந்து குணமடைந்த வேகப்பந்துவீச்சாளர்கள் நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால் ஆகியோரும் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேராவும் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்திலேயே இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை, இந்திய அணிகள் மோதும் முதலாவது போட்டியுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இத்தொடர் ஆரம்பிக்கின்றது.
குழாம்: தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், தசுன் ஷானக, குசல் பெரேரா, திஸர பெரேரா, ஜீவன் மென்டிஸ், சுரங்க லக்மால், இசுரு உதான, அகில தனஞ்சய, அமில அப்போன்ஸோ, நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, தனஞ்சய டி சில்வா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago