Editorial / 2018 ஜூலை 24 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழாமில் புதுமுக வீரராக, இளம் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய இடம்பெற்றுள்ளார். இவர் தவிர, அகில தனஞ்சய, லக்ஷான் சந்தகான் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் பிரகாசித்த வேகப்பந்துவீச்சாளர்களான லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் சுரங்க லக்மாலுடன் வேகப்பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இரண்டு அணிகளுக்குமிடையிலான தொடர், தம்புள்ளையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
குழாம்: அஞ்சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), தசுன் ஷானக, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மென்டிஸ், திஸர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, கசுன் ராஜித, அகில தனஞ்சய, பிரபாத் ஜெயசூரிய, லக்ஷன் சந்தகான், ஷெகான் ஜெயசூரிய.
இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஓட்டங்களைப் பெற்ற திமுத் கருணாரட்ன, இசுரு உதான, நிஷான் பீரிஸ், ஜெப்ரி வன்டர்சே ஆகியோர் மேலதிக வீரர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
39 minute ago
2 hours ago