2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கையின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராகத் தொடரும் வாஸ்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 27 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ், இலங்கை கிரிக்கெட் சபைக்கிடையிலான சந்திப்பொன்றையடுத்து, வாஸ் கடந்த மாதம் இராஜினாமா செய்வதற்கு வழிவகுத்த விடயங்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

தனது இராஜினாமாவை வாபஸ் பெற்ற வாஸ், வேகப்பந்துவீச்சு ஆலோசகராகத் தொடர இணங்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் வெளியீடொன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் முன்னதாக குறித்த பதவியில் வாஸ் நியமிக்கப்படவில்லை என்பதுடன், இலங்கை தேசிய அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளரொருவராக வாஸ் காணப்பட்டிருந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .