Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற இலங்கையுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, ஷகீன் ஷா அஃப்ரிடி (3), ஹரிஸ் றாஃப் (2), ஹுஸைன் தலாட் (2), அப்ரார் அஹ்மட்டிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது. கமிந்து மென்டிஸ் 50 (44) ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு 134 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், மகேஷ் தீக்ஷன (2), வனிது ஹசரங்க (2), துஷ்மந்த சமீரவிடம் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும், மொஹமட் நவாஸின் ஆட்டமிழக்காத 38 (24), ஹுஸைன் தலாட்டின் ஆட்டமிழக்காத 32 (30) ஓட்டங்களோடு 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஹுஸைன் தலாட் தெரிவானார்.
20 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
9 hours ago