Shanmugan Murugavel / 2021 மார்ச் 11 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், அன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இலங்கை சார்பாக, அஷேன் பண்டார, பத்தும் நிஸங்க ஆகியோர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டனர்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, தனுஷ்க குணதிலகவின் 55 (61), திமுத் கருணாரத்னவின் 52 (61) ஓட்டங்களோடு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றபோதும், அணித்தலைவர் கெரான் பொலார்ட், ஜேஸன் மொஹமட், பேபியன் அலன், ஜேஸன் ஹோல்டரிடம் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்து தடுமாறியது.
மத்தியவரிசையில், அஷேன் பண்டார 50 (60) ஓட்டங்களைப் பெற்ற நிலையில், 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களை இலங்கை பெற்றது. பந்துவீச்சில், ஜேஸன் மொஹமட், ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் தலா 2, கெரான் பொலார்ட், பேபியன் அலன், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 233 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 47 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஷே ஹோப் 110 (133), எவின் லூயிஸ் 65 (90), டரன் பிராவோ ஆ.இ 37 (47) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், துஷ்மந்த சமீர இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக, ஷே ஹோப் தெரிவானார்.
10 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago