Shanmugan Murugavel / 2024 நவம்பர் 13 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது தம்புள்ளயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
கேன் வில்லியம்சன், டொம் லேதம், டரைல் மிற்செல், டெவோன் கொன்வே, றஷின் றவீந்திர ஆகியோர் இல்லாத நிலையில் ஹென்றி நிக்கொல்ஸ், வில் யங்க், மார்க் சப்மன், மிஷெல் பிறேஸ்வெல் ஆகியோருக்கும் இளம்வீரர்கள் டிம் றொபின்சன், டீன் பொக்ஸ்கறொப்ட், ஸகாரி போக்கிஸ், ஜொஷ் கிளார்க்சன், மிற்செல் ஹே, நாதன் ஸ்மித் தம்மை வெளிக்காடுவதற்கான வாய்ப்பாக இத்தொடர் அமைகிறது.
மறுபுறமாக நிஷான் மதுஷ்க தொடர்ந்து சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்துகையில் அவிஷ்க் பெர்ணாண்டோ தொடர்ச்சியான சிறப்பான பெறுபேறுகளை வெளிக்காட்ட வேண்டியுள்ளது. குசல் பெரேராவும் குழாமில் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர மொஹமட் ஷிராஸ், டில்ஷான் மதுஷங்க ஆகியோரும் வாய்ப்பைக் கிடைத்தால் தம்மை நிரூபிக்க வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026