Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 23 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை வென்ற நிலையில் இலங்கையணிக்கு சவாலளிப்பதற்கு மேம்பட்ட துடுப்பாட்ட, பந்துவீச்சுப் பெறுபேறுகளை மேற்கிந்தியத் தீவுகள் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
பிரண்டன் கிங், அணித்தலைவர் ஷே ஹோப் போன்றவரிகளிடமிருந்து நீண்ட இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. முதலாவது போட்டியில் இலங்கை துடுப்பெடுத்தாடும்போது பந்து ஈரமாக இருந்த நிலையிலும் ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் உள்ளிட்டோர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
இலங்கையணியில் காயத்திலிருந்து பதும் நிஸங்க குணமடைந்தாலும் அவிஷ்க பெர்ணாண்டோவுக்கு மேலதிக வாய்ப்புகள் தரப்படலாம். இல்லாவிட்டால் நிஸங்க அணிக்குள் வந்தால் நிஷான் மதுஷ்க மத்திய வரிசையில் விளையாட வைக்கப்பட்டு சதீர சமரவிக்கிரம அணிக்கு வெளியே போகலாம்.
மேற்கிந்தியத் தீவுகளில் ஜேடன் சியல்ஸுக்குப் பதிலாக மத்தியூ போர்டே விளையாடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago