Shanmugan Murugavel / 2023 ஜனவரி 15 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியா வெள்ளையடித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதலிரண்டு போட்டிகளிலும் ஏற்கெனவே வென்றிருந்த இந்தியா, திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்து 3-0 என இலங்கையை வெள்ளையடித்தது.
இதேவேளை இப்போட்டியில் 317 ஓட்டங்களால் இந்தியா வென்ற நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் அதிக ஓட்டங்களால் பெறப்பட்ட வெற்றி இதுவாகும். முன்னதாக, அயர்லாந்துக்கெதிராக கடந்த 2008ஆம் ஆண்டு நியூசிலாந்து 290 ஓட்டங்களால் வென்றதே சாதனையாகக் காணப்பட்டிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 390/5 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி ஆ.இ 166 (110), ஷுப்மன் கில் 116 (97), றோஹித் ஷர்மா 42 (49), ஷ்ரேயாஸ் ஐயர் 38 (32) ஓட்டங்கள்)
இலங்கை: 73/10 (22 ஓவ. ) (பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 4/32, குல்டீப் யாதவ் 2/16, மொஹமட் ஷமி 2/20)
போட்டியின் நாயகன்: விராட் கோலி
தொடரின் நாயகன்: விராட் கோலி
19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026