2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான்: மூன்றாவது போட்டி இன்று

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 30 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியானது பல்லேகலவில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றதோடு, இரண்டாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாத நிலையில் இப்போட்டியில் வென்றாலே இலங்கை தொடரைச் சமப்படுத்த முடியும்.

தவிர, அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கு இப்போட்டியோடு, நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளையும் இலங்கை வெல்ல வேண்டிய கட்டாயத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .