Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2023 ஜனவரி 10 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடரானது கெளகாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளதுடன், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அணித்தலைவர் றோஹித் ஷர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல், மொஹமட் ஷமி உள்ளிட்டவர்கள் அணிக்குத் திரும்புகையில் தொடரில் இந்தியாவுக்கு சவாலளிக்க பலத்தளவு முன்னேற்றத்தை இலங்கை காண்பிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்ணாண்டோ, சரித் அஸலங்க, பதும் நிஸங்க உள்ளிட்டவர்களிடமிருந்து நீண்ட இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கமாக சூரியகுமார் யாதவ் தன்னை ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் நிலைநிறுத்திக் கொள்வதற்கு பெறுபேறுகளை வெளிக்காட்ட வேண்டியுள்ளது.
தவிர, இஷன் கிஷன், ஷுப்மன் கில் ஆகியோர் அண்மையில் பிரகாசித்த நிலையில் லோகேஷ் ராகுல் ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளதுடன், யுஸ்வேந்திர சஹால், மொஹமட் ஷமி உள்ளிட்டோரும் புதிய வீரர்களுடன் தம்மை நிரூபிக்க வேண்டியுள்ளது.
11 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
1 hours ago