2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கை எதிர் பங்களாதேஷ்: 2ஆவது டெஸ்ட் நாளை

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பல்லேகலவில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், குறித்த போட்டியின் முடிவே தொடரைத் தீர்மானிக்கவுள்ள நிலையில், இப்போட்டியானது முக்கியத்துவம் பெறுகிறது.

முதலாவது போட்டியும் பல்லேகலவிலேயே இடம்பெற்றிருந்த நிலையில், அப்போட்டி இடம்பெற்ற ஆடுகளமானது போட்டியின் எந்நாளிலும் பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித சாதகத்தையும் வழங்காது தட்டையானதாகக் காணப்பட்டிருந்த நிலையில், இரண்டு அணிகளினதும் வீரர்கள் ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.

அந்தவகையில், தொடரானது தீர்க்கமான முடிவைப் பெறுவதற்கு ஆடுகளம் மேம்பட வேண்டியுள்ளது. வழமையானதாக பல்லேகலவானது வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகக் காணப்படுகின்ற நிலையில், முதலாவது டெஸ்டில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமாரவை, இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் அசித பெர்ணான்டோ பிரதியிடுவதே இலங்கையணியில் ஒரேயொரு மாற்றமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

மறுபக்கமாக பங்களாதேஷ் அணியில் எவ்வித மாற்றமும் இருக்காதெனக் கருதப்படுகிறது. எனினும், வேகப்பந்துவீச்சாளர்கள் அபு ஜயெட்டும், எபொடொட் ஹொஸைனும் மேலும் கட்டுக்கோப்பாக பந்துவீச வேண்டியவர்களாக உள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .