2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை எதிர் பங்களாதேஷ் 2ஆவது டெஸ்ட்: 2 அணிகளும் முன்னிலைக்கு போராட்டம்

Shanmugan Murugavel   / 2022 மே 24 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மிர்பூரில் நேற்று ஆரம்பமான இரண்டாவது போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் முன்னிலைக்கு இரண்டு அணிகளும் போராடுகின்றன.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், கசின் ராஜித (3), அசித பெர்ணாண்டோவிடம் (2) வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் முஷ்பிக்கூர் ரஹீமின் ஆட்டமிழக்காத 175, லிட்டன் தாஸின் 141 ஓட்டங்களின் மூலம் கெளரவமான நிலையை அடைந்தபோதும் மீண்டும் ராஜித, பெர்ணாண்டோவிடம் தலா 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 365 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, ஒஷாட பெர்ணாண்டோ, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது.

பின்னர் 57 ஓட்டங்களுடன் ஒஷாட பெர்ணாண்டோ எபொடொட் ஹொஸைனுடன் வீழ்ந்ததுடன், அடுத்து வந்த குசல் மென்டிஸும் சிறிது நேரத்தில் ஷகிப் அல் ஹஸனிடம் வீழ்ந்தார்.

இந்நிலையில், இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 143 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  தற்போது களத்தில் கருணாரத்ன 70 ஓட்டங்களுடனும், ராஜித ஓட்டமெதுவும் பெறாமலும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X