Shanmugan Murugavel / 2021 மார்ச் 29 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்த நிலையில், அன்டிகுவாவில் நடைபெறவுள்ள இப்போட்டியானது தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைகிறது.
இலங்கையைப் பொறுத்த வரையில், லஹிரு திரிமான்ன, பத்தும் நிஸங்க, தனஞ்சய டி சில்வா, ஒஷாத பெர்ணான்டோ, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், டுஷ்மந்த சமீர, லசித் எம்புல்தெனிய, விஷ்வ பெர்ணான்டோவின் பெறுபேறுகள் திருப்தியளிப்பதாகக் காணப்பட்ட நிலையில், சிரேஷ்ட வீரர்களான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமாலிடமிருந்து மேம்பட்ட பெறுபேற்றை எதிர்பார்க்கிறது.
இரண்டு அணிகளிலும் மாற்றமெதுவும் இருக்காதெனக் கருதப்படுகின்ற நிலையில் சிரேஷ்ட வீரர்களான ஷனொன் கப்ரியல், அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட்டிடமிருந்து மேம்பட்ட பெறுபேறுகளை மேற்கிந்தியத் தீவுகளும் எதிர்பார்க்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் எட்டாமிடத்திலிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள், இப்போட்டியில் வென்றால் ஏழாமிடத்துக்கு முன்னேறும் என்பதோடு, ஏழாமிடத்திலிருக்கும் இலங்கை, எட்டாமிடத்துக்கு கீழிறங்குமென்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
1 hours ago
2 hours ago