Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 18 , மு.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா சிம்பாபே அணிக்கும் இலங்கை அணிக்கும் கண்டி- பல்லேகலையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிப்பெற்ற சிம்பாபே அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 296 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சேஹ்ன் வில்லியம்ஸன் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
87 பந்துகளுக்கு முகம்கொடுத்து 100 ஓட்டங்களைப் பெற்ற அவர், 2 ஆறு ஓட்டங்களையும் 9 நான்கு ஓட்டங்களையும் பெற்று சதம் அடித்தார்.
297 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி சார்பாக சந்திமால் மற்றும் நிசங்க ஆகியோர் இணைப்பாட்டமாக 75 ஓட்டங்களையும் சரித் அசலங்க 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதற்கமைய புதிய வருடத்தில் முதலாவது போட்டியை இலங்கை அணி வெற்றிக்கொண்டதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, பல்லேகல மைதானத்தில் இன்று (18) நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .