2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை தொடரில் இருந்து முக்கிய வீரர்கள் விலகல்

J.A. George   / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காயம் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.  

இந்நிலையில் முன்னைய தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது.  ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில்  பீல்டிங் செய்யும் போது சூரியகுமார் யாதவிற்கு கையில் காயம் ஏற்பட்டது.  

இதனால் குறைந்தது மூன்று வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.   மேலும் தீபக் சாஹருக்கு தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.  இதனால் நேரடியாக அடுத்து ஐபிஎல் போட்டிகளில் சாஹர் விளையாட உள்ளார்.  

இந்திய T20I அணி: ரோஹித் சர்மா (C), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (WK), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அவேஷ் கான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X