Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இடம்பெறவுள்ள பெண்களுக்கான உலக இருபதுக்கு-20 தொடரில், இலங்கை அணியின் தலைவியாக ஷஷிகலா சிரிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழாமின் தலைவியாகவே, அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றை, காயம் காரணமாகத் தவறவிட்டிருந்த நிலையில், இக்குழாமின் தலைவியாக ஷஷிகலா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷஷிகலா தவிர, அத்தொடரைத் தவறவிட்டிருந்த சகலதுறை வீராங்கனை இஷானி லொக்குசூரியகே கௌஷல்யா, துடுப்பாட்ட வீராங்கனை யசோதா மென்டிஸ், வேகப்பந்து வீச்சாளர் உதேஷிகா பிரபோதனி ஆகியோரும், இக்குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குழாம்: ஷஷிகலா சிரிவர்தன, சாமரி அத்தப்பத்து, யசோதா மென்டிஸ், ஒஷாடி றணசிங்க, டிலானி மனோதரா, பிரசாதனி வீரக்கொடி, அ காஞ்சனா, இஷானி லொக்குசூரியகே கௌஷல்யா, உதேஷிகா பிரபோதனி, இனோகா றணவீர, சுகந்திகா குமாரி, நிலக்ஷி டி சில்வா, ஹன்சிமா கருநாயக்க, நிபுணி ஹன்சிகா, ஹர்ஷிதா மாதவி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .