2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இலங்கை அணியின் பயிற்சியாளராக மீண்டும் போர்ட்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 29 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் கவுண்டி அணியான சரேயின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கிரஹாம் போர்ட் செல்லவுள்ளார் என அவ்வணி அறிவித்துள்ளதையடுத்து, இரண்டாவது தடவையாக இலங்கை அணியின் பயிற்விப்பாளராக கிரஹாம் போர்ட் பணியாற்றவுள்ளார்.

2019ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வரை பயிற்சியாளராக கடைமையாற்றுவதற்கு போர்ட் கைச்சாத்திட்டுள்ளார் என்று நம்பப்படுகையில், அடுத்த மாத ஆரம்பத்திலிருந்து, தனது பணியை போர்ட் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2012 ஆரம்பத்திலிருந்து இரண்டு வருடங்களுக்கு இலங்கையணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த போர்ட், கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து மீண்டும் பயிற்சியாளராவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோதும், இம்மாதமே, இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் இடம்பெற்று நிர்வாகம் மாறுவதால், அதற்றகு பணியை ஏற்க மறுத்திருந்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம், மார்வன் அத்தப்பத்து பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்திருந்த நிலையில், இடைப்பட்ட ஐந்து மாத காலப்பகுதியில் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயவர்த்தன கடமையாற்றியிருந்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .