Shanmugan Murugavel / 2017 ஜனவரி 01 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக, முன்னாள் தலைவரும் அந்நாட்டின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான றிக்கி பொன்டிங் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தத் தொடர் முடிவடைந்து மறுநாளே, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதால், வழக்கமான பயிற்றுநர்களும் உதவியாளர்களும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ள நிலையிலேயே, புதியவர்கள், பயிற்றுவிப்புப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், பயிற்றுநராக ஜஸ்டின் லாங்கரும் உதவிப் பயிற்றுநராக ஜேஸன் கிலெஸ்பியும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே தற்போது, அடுத்த உதவிப் பயிற்றுநராக, பொன்டிங் சேர்க்கப்பட்டுள்ளார். இம்மூவருமே, ஒரே நேரத்தில் அவுஸ்திரேலிய அணியில் விளையாடிவர்கள் என்ற அடிப்படையில், நெருக்கமானவர்களாகக் கருதப்படுகிறது.
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago