Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, இலங்கை பெண்கள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இந்திய மகளிர் அணிக்கு அதிரடி வெற்றி கிடைத்துள்ளது.
ராஞ்சியில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஸ்மிரிதி மந்தானா 55 (81), ஹார்மன்பிறீட் கௌர் 50 (61), அணித்தலைவி மித்தாலி ராஜ் 49 (74) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஷஷிகலா சிரிவர்தன, உதேஷிகா பிரபோதினி இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
246 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 45.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 107 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் அவ்வணி, 2 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், பின்னர் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. இறுதி 7 விக்கெட்டுகளும், 16 ஓட்டங்களுக்கு இழக்கப்பட்டிருந்தன. துடுப்பாட்டத்தில் பிரசாதனி வீரக்கொடி 69 (113) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ராஜேஷ்வரி கயக்வாட், தீப்தி ஷர்மா இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகியாக, ஸ்மிரிதி மந்தானா தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .