Editorial / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், இலங்கையின் முதலாவது பதக்கத்தை பரமி வசந்தி மேரிஸ்டெலா பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவின் தலைநகர் புவனேர்ஸ் அயர்ஸில் இடம்பெற்றுவரும் மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான 2,000 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை நேற்றுப் பெற்றதன் மூலமே இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் முதலாவது பதக்கத்தை பரமி வசந்தி பெற்றுள்ளார்.
இதேவேளை, இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வென்ற முதலாவது பதக்கமாக பரமி வசந்தி மேரிஸ்டெலா வென்ற வெண்கலப் பதக்கமே காணப்படுவதோடு, 2007ஆம் ஆண்டு உலக சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 200 மீற்றரில் சுசந்திகா ஜயசிங்க வெண்கலப் பதக்கத்தை வென்றதன் பின்னர், பூகோள தடகளப் போட்டியொன்றில் இலங்கை பதக்கமொன்றைப் பெறும் முதலாவது சந்தர்ப்பமாக பரமி வசந்தி மேரிஸ்டெலா பெற்ற வெண்கலப் பதக்கம் அமைந்தது.
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
2 hours ago