Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், டெல்லியில் தற்போது முடிவுக்கு வந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான குழு டி போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ரஷீட் கான், ஐக்கிய அரபு அமீரகத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐ.அ. அமீரகம், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (4), முஜீப் உர் ரஹ்மான் (2), அணித்தலைவர் ரஷீட் கானிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. சொஹைப் கான் 68 (48), அலிஷான் ஷரஃபு 40 (31) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 161 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், இப்ராஹிம் ஸட்ரானின் 53 (41), அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத 40 (21), டர்விஷ் ரசூலியின் 33 (23) ஓட்டங்களோடு 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ஜூனைட் சித்திக் 3.2-0-23-2, முஹமட் அர்ஃபான் 4-0-30-2, ஹைதர் அலி 4-0-33-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவானார்.
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago